tnpsc tamil questions

6th New Book – இன்பத்தமிழ் வாழ்த்து

சொல்லும் பொருளும்

  • நிருமித்த – உருவாக்கிய
  • விளைவு – வளர்ச்சி
  • சமூகம் – மக்கள் குழு
  • அசதி – சோர்வு

படித்துக்கொள்ளுங்கள்: கவிஞர் பாரதிதாசன் இன்பத்தமிழ் வாழ்த்து பாடலில் தமிழுக்கு வைத்துள்ள பெயர்கள் – அமுது, நிலவு, மணம்.

படித்துக்கொள்ளுங்கள்: தமிழ் எங்கள் இளமைக்கு பால் போன்றது.

படித்துக்கொள்ளுங்கள்: தமிழ் எங்கள் உயர்விற்கு வானம் போன்றது.

படித்துக்கொள்ளுங்கள்: தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது.

நூல் வெளி:

  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
  • பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • தம் கவிைதகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம் , பொதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைளப் பாடுபொருளாக பாடியுள்ளார்.
  • இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
  • இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • இன்பத்தமிழ் வாழ்த்து, ‘பாரதிதாசன் கவிைதகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பில்  கீழ் இடம்பெற்றுள்ளது.

வினா விடை

1.இன்பத்தமிழ் வாழ்த்து பாடலை இயற்றியவர் யார்?

A. பாரதிதாசன்

B. பாரதியார்

C. பேருஞ்சித்திரனார்

D. அறிவுமதி

Show Answer

Answer is A. பாரதிதாசன்

 

1.ஏற்றத் தாழ்வற்ற_______ அமைய வேண்டும்?

A. சமூகம்

B. நாடு

C. வீடு

D. தெரு

Show Answer

Answer is A. சமூகம்

 

2.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு________ஆக இருக்கும் ?

A. மகிழ்ச்சி

B. கோபம்

C. வருத்தம்

D. அசதி

Show Answer

Answer is D. அசதி

 

3.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________?

A. நிலயென்று

B. நிலவென்று

C. நிலவன்று

D. நிலவுஎன்ற

Show Answer

Answer is B. நிலவென்று

 

4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______?

A. தமிழங்கள்

B. தமிழெங்கள்

C. தமிழுங்கள்

D. தமிழ்எங்கள்

Show Answer

Answer is B. தமிழெங்கள்

 

5.’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______?

A. அமுது + தென்று

B. அமுது + என்று

C. அமுது + ஒன்று

D. அமு + தென்ற

Show Answer

Answer is B. அமுது + என்று

 

6.‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______?

A. செம்மை + பயிர்

B. செம் + பயிர்

C. செமை + பயிர்

D. செம்பு + பயிர்

Show Answer

Answer is A. செம்மை + பயிர்

 

7.பொருத்துக.

1.விளைவுக்கு – பால்
2.அறிவுக்கு – வேல்
3.இளமைக்கு – நீர்
4.புலவர்க்கு – தோள்

Show Answer

Answer is
1.விளைவுக்கு – நீர்
2.அறிவுக்கு – தோள்
3.இளமைக்கு – பால்
4.புலவர்க்கு – வேல்

 

 

Leave a Comment