2021 வந்த ரேஷன் கடை வேலை ரத்து

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ . பெரியசாமி அறிவித்தார்.

தமிழக சட்ட பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு கூட்டுறவு துறை அமைச்சர்  ஐ.பெரியாசாமி அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள்,666 கட்டுனர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளை ரத்து செய்து1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பனி நியமனம் மேற்கொள்ளப்படும்.

2021 வந்த ரேஷன் கடை வேலை ரத்து

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை மூலம் நேரடி கொள்முதல் விற்ப்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடபட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்களைஅமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஏற்படுத்தபட்டுதள்ளது .

இதுவரை,19 மாவட்டங்களில்,68 நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளன இது மேலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு  அவர் கூறினார்.

Leave a Comment